இதில் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையிலான நிதி அனுமதிக்கப்படும். இங்கு ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து லஞ்சம் பெறப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்தது. இதையடுத்து நேற்று மதியம் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசார், வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்றனர். இங்குள்ள இன்ஜினியரிங் பிரிவு அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த அறையில் உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் தனியார் உதவியாளர் சத்யா ஆகியோர் இருந்தனர். ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசாரின் சோதனை மாலை வரை நீடித்தது. அலுவலக அறையில் இருந்த மேசை டிராயரில் இருந்து கணக்கில் வராத பணம் ரூ.1.06 லட்சம் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தூத்துக்குடி பிடிஓ ஆபீசில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு: ரூ.1.06 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.