குட் பேட் அக்லி இளையராஜாவால் ஓடவில்லை: கங்கை அமரன் கருத்துக்கு பிரேம்ஜி பதிலடி

சென்னை: அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த 10ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜாவின் இசையில் உருவான பாடல்களான, ‘ஒத்த ரூபாய் தாரேன்’, ‘என் ஜோடி மஞ்சக்குருவி’, ‘இளமை இதோ இதோ’ ஆகிய பாடல்கள் இடம் பெற்றிருந்தன. இந்த பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. குறிப்பாக இந்த பாடல்கள் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த இடம், அவற்றை காட்சிப்படுத்திய விதம் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

படம் வெளியான பின்னர் இளையராஜா தரப்பில் இருந்து படக்குழுவினருக்கு முறையான அனுமதி இல்லாமல், தனது பாடல்கள் பயன்படுத்தப்பட்டு விட்டதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதில், நஷ்ட ஈடாக ரூபாய் 5 கோடி தர வேண்டும் எனவும் இல்லை என்றால், வழக்கு தொடுக்கப்படும் எனவும் கூறப்பட்டது.

இதற்கிடையில் படத்தில் பயன்படுத்தப்பட்ட இளையராஜாவின் பாடல்களால் தான் ‘குட் பேட் அக்லி’ படம் வெற்றிப் படமாக மாறியுள்ளது என கங்கை அமரன் தெரிவித்திருந்தார். இது பற்றி நடிகரும் கங்கை அமரனின் மகனுமான பிரேம்ஜி கூறும்போது, ‘‘எனது அப்பா பேசியது, அவரது அண்ணனுக்கு ஒரு பிரச்னை எனும்போது அவரது அண்ணனுக்கு ஆதரவாக பேசியுள்ளார். நான் எனது அண்ணனுக்கு ஒரு பிரச்னை என்றால் பேசுவேன் அல்லவா? அதுபோலத்தான். இளையராஜாவால்தான் படம் ஓடியது என அவர் சொன்னதாக கேட்கிறீர்கள். அதெல்லாம் சும்மா. உண்மை என்பது அனைவருக்கும் தெரியும். தல படம் தல அஜித்தால் தான் ஓடும். அதுதான் நிஜம்’’ என்றார்.

The post குட் பேட் அக்லி இளையராஜாவால் ஓடவில்லை: கங்கை அமரன் கருத்துக்கு பிரேம்ஜி பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: