சென்னை: தென் தமிழ்நாட்டில் ஆழ்கடல் பரப்பில் எரிவாயு எடுக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்ததற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடரபாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய காங். எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார்; அரசு தனித் தீர்மானம் கொண்டு வந்து திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். ஆழ்கடல் எரிவாயு திட்டத்தால் குமரி மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். திட்டம் செயல்படுத்தப்பட்டால் கடல் வளம் பாதிக்கப்படும். நச்சுத் தன்மை வாய்ந்த மீன்களை பொதுமக்கள் சாப்பிடும் நிலை ஏற்படும் என்றும் சட்டப்பேரவையில் காங். உறுப்பினர் ராஜேஷ்குமார் தெரிவித்தார்.
The post ஆழ்கடலில் எரிவாயு எடுக்க காங்கிரஸ் எதிர்ப்பு appeared first on Dinakaran.