இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை, ஜெய்ஹிந்த்புரத்தில் வசித்தனர். அப்போது வீட்டில் நாய் வளர்த்துள்ளனர். அந்த நாய்க்கு உணவு வழங்கும்போது, ஒரு பெண் நாயும் சேர்ந்து உணவு சாப்பிடுவது வழக்கம். பின்னர் சாலையம்மன் நகருக்கு வீடு மாற்றும்போது, பெண் நாயும் உடன் வந்தது. இதற்கு கண்ணம்மா என பெயரிட்டு வளர்த்துள்ளனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு, கண்ணம்மாவின் மீது டூவீலர் மோதியதில் அதன் பின்னங்கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. ஸ்கேன் செய்து பார்த்தபோது, முதுகு தண்டுவடம் விபத்தில் நொறுங்கி போனதால் இனி நடக்க முடியாது என கால்நடை டாக்டர் கூறியுள்ளார்.
மோகன் தம்பதி, பழையபடி கண்ணம்மாவை நடக்க வைக்க பலரிடம் யோசனை கேட்டபோது சிலர் சக்கர வண்டி தயார் செய்து நடை பயிற்சி அளித்தால் இயல்பாக செயல்பட முடியும் என்றனர். இதையடுத்து மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள நிறுவனத்தை தொடர்பு கொண்டு கண்ணம்மாவிற்கு ஸ்பெஷல் வாகனம் தயாரிக்கும்படி மோகன் கேட்டுள்ளார். அவர்களும் அதற்கேற்ற வகையில் ரூ.8 ஆயிரம் செலவில் தயார் செய்து அனுப்பினர்.
அந்த சக்கரவண்டியில் தினமும் நடைபயிற்சி கொடுத்தனர். இதனால் முன்னேற்றம் அடைந்த கண்ணம்மா, தற்போது கப்பலூரில் உள்ள மைதானத்தில் நடை பயிற்சிக்கு வந்து செல்கிறது. செயல் இழந்த கால்கள் மேலும் சேதமடையாமல் இருக்க சாக்ஸ் அணிவித்து தரையில் படாமல் சற்று தூக்கி கட்டிக்கொண்டு வாக்கிங் அழைத்து செல்கின்றனர்.
சிறிய ரேக்ளா வண்டி போல இழுத்துச்செல்லும் கண்ணம்மாவை, அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து, மோகன் தம்பதியை பாராட்டி வருகின்றனர். வீட்டிலிருந்து ஸ்பெஷல் வாகனத்துடன் கிளம்பும் கண்ணம்மா, ஒரு கிமீ தூரம் சென்று வாக்கிங்கை முடித்து திரும்புகிறது. அதன்பின்பு வாகனம் அகற்றப்பட்டு விடும் என மோகன் தெரிவித்தார்.
The post விபத்தில் கால்கள் செயல் இழப்பு வளர்ப்புநாய்க்கு சக்கர வண்டியுடன் வாக்கிங்: ‘கண்ணம்மாவை’ கண் போல காக்கும் ஓய்வு எஸ்ஐ appeared first on Dinakaran.