ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்களை கண்காணிக்க உத்தரவு

சென்னை: ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்களை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. ஐஸ்கிரீம் நிறுவனங்கள் உணவு பாதுகாப்புத் துறை விதிகளை கடைப்பிடிக்கின்றனவா? என கண்காணிக்க வேண்டும். ஐஸ்கிரீம் தயாரிப்பு உபகரணங்கள், மூலப்பொருள்கள் தயாரிப்பை உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். காலாவதி தேதி, உணவு பாதுகாப்பு உரிம எண் போன்ற விவரங்களையும் தொடர்ச்சியாக ஆய்வு செய்ய வேண்டும். ஐஸ்கிரீம் நிறுவனங்கள் மீது புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

The post ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்களை கண்காணிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: