வளர்ச்சி விகிதத்தில் கூட்டுறவுத்துறையும் முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். 11.83 லட்சம் பேருக்கு ரூ.4,918 கோடி தள்ளுபடி சான்றிதழுடன், அடமான நகைகள் திருப்பி வழங்கப்பட்டுள்ளன. 68 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.54,968 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது மற்றும் கால்நடை வளர்ப்பு பணிக்கு ரூ.6610 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.11,627 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட 19,791 பெண்களுக்கு 5% வட்டியில் ரூ.65 கோடி கடன் தரப்பட்டுள்ளது என கூறி முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றியும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
The post பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய உச்சம்: முதல்வருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் appeared first on Dinakaran.