இதுகுறித்த கடிதத்தை, மார்ச் 18ம் தேதி பள்ளிகளுக்கு அனுப்பியது. இந்த ஆண்டு முதல், தேர்ச்சி பெறத் தேவையான மதிப்பெண்கள் பெறாவிட்டால், ‘பெயில்’ ஆக்க வேண்டும். அதை பெற்றோருக்கு தெரிவித்து, ஒப்புதல் பெற வேண்டும் என ஒன்றிய கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. ஆண்டு இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், மீண்டும் தேர்வு நடத்தி, அதில் வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் அமைச்சகம் வலியுறுத்தியது.
அதிலும் தேர்ச்சி பெறாத மாணவர்களை மட்டுமே, அதே வகுப்பில் மீண்டும் படிக்க அனுமதிக்க வேண்டும் என, சி.பி.எஸ்.இ. தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில், 5,8ம் வகுப்பில் மதிப்பெண் குறைந்தால் பெயில் என்ற நடைமுறை இன்று அமலுக்கு வந்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் இந்த விதி திருத்தப்பட்டது; இதன்படி 3,5,8ம் வகுப்பில் குறைவான மதிப்பெண் எடுத்தால் பெயில் ஆக்கப்படுவர். குறைந்த மார்க் எடுத்தால் பெயிலாக்க சம்மதிக்கிறேன் என பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெறப்பட்டு வருகின்றன.
The post சிபிஎஸ்இ பள்ளிகளில் 5,8ம் வகுப்பில் மதிப்பெண் குறைந்தால் பெயில் என்ற நடைமுறை அமல்..!! appeared first on Dinakaran.