காஞ்சிபுரம், ஏப்.10: காஞ்சிபுரம் மாவட்டம் தமிழக இலவச பயிற்சி மைய கூட்டரங்கில், தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் மற்றும் விவசாயிகள் வணிகர்கள் தொழில் துறையினர் கூட்டமைப்பு சார்பில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நேற்று தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் மாநில தலைவர் கே.தெய்வசிகாமணி தலைமையில் நடைபெற்றது. விவசாயிகள் வணிகர்கள் தொழில் துறையினர் கூட்டமைப்பு தலைவர் கே.எழிலன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய பிரச்னைகள், தர்பூசணி விவசாயிகள் பாதிப்பு உள்ளிட்டவை குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில், சங்கத்தின் மாநில இளைஞர் அணி தலைவராக செந்தில்நாதன் புகழ், மாநில ஒருங்கிணைப்பாளர் திருச்சி பாலு(எ) சி.சண்முகசுந்தரம், மாநில மகளிர் அணி தலைவியாக பவித்ரா, காஞ்சிபுரம் மண்டல மகளிர் அணி தலைவியாக புஷ்பவள்ளி, காஞ்சிபுரம் மாவட்ட தலைவராக முசரவாக்கம் பிரபாகரன், மாவட்ட செயலாளர் படுநெல்லி சேகர், மாவட்ட பொருளாளர் பாலாஜி ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு விவசாயிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
The post விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு appeared first on Dinakaran.