பொது இடத்தில் மது குடித்த 4 பேர் கைது

 

காங்கயம், ஏப்.9: ஊதியூர் சுற்று பகுதியில் உள்ள சாலைகள், பஸ் நிற்கும் நிழற்குடை, காய்கறி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக குடிமகன்கள் மது குடிக்கின்றனர். மேலும், இரவு நேரத்தில் அரசு அலுவலக வளாகத்தில் புகுந்து மது குடித்து அசுத்தம் செய்கின்றனர். சில குடிமகன்கள் தொல்லையால், பெண்கள் வேலை முடித்து வீடு திரும்பும் போது சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இது குறித்து பல்வேறு புகார்கள் எழுந்து இதையடுத்து ஊதியூர் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர்.

இதில், பொது இடங்களில் மது குடித்த கவுண்டம்பாளையம் காலணி தர்மராஜ் (23), குங்காருபாளையம் சந்தோஷ் (22), நிழலி காஞ்சிபுரம் சக்திவேல் (47), பெருமாள்பாளையம் சக்திவேல் (45) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மது பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டு, ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பொது இடத்தில் மது குடித்த 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: