இந்த பொது அதிகாரத்தை சைதாப்பேட்டை சார்பதிவாளராக பணியாற்றிய ராஜசேகர் வழங்கியுள்ளார். அவர் இதை பதிவு செய்யும்போது எந்த முன் ஆவணங்களையும் பார்க்கவில்லை. மேலும் பட்டாவில் கலாஷேத்ரா பெயரும், நிலத்தின் உரிமையாளர் என்று கூறப்பட்டவரின் பெயரும் இடம் பெற்று இருந்தது. அப்ேபாதே இது போலி ஆவணம் என்று உறுதி செய்திருக்கலாம். அவ்வாறு உறுதி செய்யவில்லை. மாறாக பொது அதிகார பத்திரத்தை சார்பதிவாளர் ராஜசேகர் பதிவு செய்து கொடுத்துள்ளார்.
இந்தநிலையில் பொது அதிகாரம் பதிவு செய்துள்ளவர், அந்த இடத்தை விற்பனை செய்ய தற்போதைய சார்பதிவாளரிடம் முயன்றபோது, இது போலி ஆவணம் என்று கண்டறிந்து, புதிய பதிவு செய்ய முடியாது என்று கூறிவிட்டார். இந்த தகவல் குறித்த செய்தி தினகரன் பத்திரிகையில் வெளியானது. அதைத் தொடர்ந்து, இது குறித்து விசாரணை நடத்த பதிவுத்துறை ஐஜி தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் உத்தரவிட்டார். மேலும், இது குறித்து கமிட்டி அமைத்து, ஆய்வு செய்யவும் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து ஐஜி அமைத்த கமிட்டியினர், இந்த பதிவுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித்தனர்.
அந்த அறிக்கையில் முறைகேடு நடந்தது உண்மை என்று தெரியவந்ததால், போலியான பதிவு செய்த சார்பதிவாளர் ராஜசேகரை சஸ்பெண்ட் செய்து ஐஜி தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் உத்தரவிட்டார். தற்போது ராஜசேகர், கோடம்பாக்கம் சார்பதிவாளராக பணியாற்றி வந்தார். மேலும், போலியான பத்திரப்பதிவு செய்ததை தணிக்கை குறிப்பில் மாவட்ட பதிவாளர் எழுதாதால், அவர் மீது விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், ஒன்றிய அரசுக்குச் சொந்தமான நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்த பதிவாளர் ராஜசேகர் மீது போலீசில் புகார் செய்வது குறித்து கலாஷேத்ரா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
The post ரூ.300 கோடி மதிப்புள்ள கலாஷேத்ரா நிலத்தை போலி ஆவணம் மூலம் பதிவு செய்த சார்பதிவாளர் சஸ்பெண்ட்: பதிவுத்துறை ஐஜி நடவடிக்கை appeared first on Dinakaran.