அப்போது திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த வெண்மணி கிராமத்தில் பால் கொள்முதல் நிலையம் வைத்துள்ள அதிமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கணேசனுக்கு(49) சொந்தமான லோடு ஆட்டோவை, அதே கிராமத்தை சேர்ந்த டிரைவர் தரணி(22) ஓட்டி வந்துள்ளார். பைக் மீது லோடு ஆட்டோ மோதியதில் நிலைதடுமாறி விழுந்த சத்தியகுமாருக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
தொடர்ந்து நேற்று வெண்மணி கிராமத்தில் உள்ள பால் கொள்முதல் நிலையத்திற்கு சத்தியகுமார், அவரது தாய் சிவராணி(54), தந்தை பாலு(60), மனைவி பிரீத்தா(27) ஆகியோர் சென்று, அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கணேசனிடம், ‘உங்களது லோடு ஆட்டோ மோதியதால் தான் கை முறிவு ஏற்பட்டது. எனவே நியாயப்படி மருத்துவ செலவுக்கு நீங்கள் தான் பணம் தர வேண்டும்’ என்று கேட்டுள்ளனர். அதற்கு கணேசன் மற்றும் அவரது லோடு ஆட்டோ டிரைவர் இருவரும் சேர்ந்து சத்தியகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். பணம் கேட்டு வந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியும் உள்ளனர்.
இதில் காயமடைந்த சிவராணி, பாலு, பிரீத்தா ஆகிய 3 பேர் போளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்ைச பெற்று வருகின்றனர். இதுபற்றி போளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில் நரிக்குறவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் போளூர் சப்- இன்ஸ்பெக்டர் ஞானவேல், நேற்றிரவு அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் மற்றும் லோடு ஆட்டோ டிரைவர் தரணி ஆகிய இருவரையும் கைது செய்தார்.
The post விபத்து ஏற்படுத்தி கை முறிந்ததற்கு நியாயம் கேட்க சென்ற நரிக்குறவர்களை கொடூரமாக தாக்கிய அதிமுக மாஜி ஊராட்சி தலைவர் கைது appeared first on Dinakaran.