குடியாத்தம்: குடியாத்தம் – காட்பாடி ரோட்டில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், ஊராட்சி உதவி பொறியாளராக இருப்பவர் நிர்மல் குமார். இவர், தனியார் ஒப்பந்த நிறுவன மேலாளர் லிங்கேஸ்வரனிடம் சாலை பணிகளுக்கான காசோலையை வழங்குவதற்கு நேற்று ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.