உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம்

கிருஷ்ணகிரி: இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 2024-25ம் ஆண்டு 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு “என் கல்லூரிக் கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டு ஆலோசனை முதற்கட்ட முகாம், வருகிற 6ம் தேதி காலை 10 மணியளவில், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறகிறது. இதில் அரசு அதிகாரிகள், நேச்சர் எம்எம்டி குழுவினர், டான்போஸ்கோ குழுவினர் மற்றும் தன்னார்வலர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது.

இதில், 12ம் வகுப்பு முடிந்த பின் நம் நாட்டில் தற்போது வழங்கப்படும் அனைத்து பட்ட, பட்டய தொழிற்முறை படிப்புகள் மற்றும் அவை வழங்கப்படும் கல்வி நிறுவனங்கள் குறித்து அனைத்து தகவல்களும், தொழில்முறை கல்வி ஆலோசகர்களால் வழங்கப்பட உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எஸ்சி., எஸ்டி பிரிவை சேர்ந்த மாணவர்கள், தங்கள் பெற்றோர்களுடன் கலந்துகொண்ட பயன்பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம் appeared first on Dinakaran.

Related Stories: