முதல் கட்ட நீச்சல் பயிற்சி முகாம் தொடக்கம்

கிருஷ்ணகிரி, ஏப்.4: கிருஷ்ணகிரியில் ஐந்து கட்டமாக நடைபெறும் நீச்சல் பயிற்சி முகாமில், முதல் கட்ட பயிற்சி முகாமில் 18 பேர் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர். கோடை விடுமுறையை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில், நடப்பாண்டு 12 நாட்கள் வீதம் ஐந்து கட்டங்களாக நீச்சல் பயிற்சி வழங்கப்படுகிறது. முதல் கட்ட நீச்சல் பயிற்சி முகாம், கடந்த 1ம் தேதி தொடங்கியது. இந்த முகாம், வருகிற 13ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த முகாமினை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் தொடங்கி வைத்தார். முதல் கட்ட பயிற்சியில், 11 மாணவர்களும், 7 மாணவிகளும் முறையாக பயிற்சி பெற்ற அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பயிற்சியாளர்கள் மூலம் காலை, மாலை பயிற்சி பெற்று வருகின்றனர்.

2ம் கட்ட பயிற்சி வருகிற 15ம் தேதி முதல் 27ம் தேதி வரையும், 3ம் கட்ட பயிற்சி முகாம் வருகிற 29 முதல் மே மாதம் 11ம் தேதி வரையும், 4ம் கட்ட பயிற்சி மே மாதம் 13ம் தேதி முதல் 25ம் தேதி வரையும், 5ம் கட்ட பயிற்சி மே மாதம் 27ம் தேதி முதல் ஜூன் மாதம் 8ம் தேதி வரையும் நடைபெறவுள்ளது. நீச்சல் கற்றுக் கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கட்டணமாக ₹1,500 மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டியுடன் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். இத்தகவலை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் தெரிவித்தார்.

The post முதல் கட்ட நீச்சல் பயிற்சி முகாம் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: