சாத்தூர், மார்ச் 30: சாத்தூரில் இருந்து நாருகாபுரம் செல்லும் சாலை கடந்தாண்டு பெய்த பருவமழையில் மிகவும் சேதமடைந்தது. மேலும் இந்த சாலை வழியாக அதிகளவில் வாகன போக்குவரத்தும் இருந்து வந்தது. இதனால் ஒரு வழித்தடமாக இருந்த சாலையை ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1.88 கோடி மதிப்பில் இடைவழித் தடமாக மாற்றும் பணி கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்தது. இப்பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், சாலையின் தரத்தை திருநெல்வேலி நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் ஜெயராணி ஆய்வு செய்தார். உடன் உதவி கோட்டப்பொறியாளர் அனந்த்குமார், உதவி பொறியாளர் அபிநயா ஆகியோர் இருந்தனர்.
The post சாத்தூரில் ரூ.1.88 கோடியில் சாலை பணிகளை ஆய்வு appeared first on Dinakaran.