திருச்சியில் சொத்து தகராறில் இளம்பெண் மானபங்கம்

திருச்சி, ஏப்.2: திருச்சியில் சொத்து தகராறில் பெண்ணை மானபங்கம் செய்தவரை, தட்டிக்கேட்ட நபரை இரும்பு ராடால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி கொட்டப்பட்டு இந்திரா நகரை சேர்ந்தவர் கருணாமூர்த்தி (38). இவருக்கும் கொட்டப்பட்டு காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பிரபாவதி என்ற உறவினருக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த மார்ச்.30 அன்று, மீண்டும் சொத்து பிரச்னை எழுந்தது. இதில் கருணாமூர்த்தி பிரபாவதியின் சேலையை பிடித்து இழுத்து கீழே தள்ளி, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதில் பிரபாவதி காயமடைந்தார்.

இதுகுறித்து மற்றொரு உறவினரான தென்னூர் மின்துறை அலுவலகத்தில் வேலை பார்த்து வருபவரும், கொட்டப்பட்டு மதுரை வீரன் கோயில் தெருவை சேர்ந்தவருமான இளங்கோவன் என்பவர் தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கருணாமூர்த்தி, இரும்பு ராடால் இளங்கோவனை தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த இளங்கோவன், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருடன் பிரபாவதியும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் குறித்து காயமடைந்த இருவரும் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் கருணாமூர்த்தி மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

The post திருச்சியில் சொத்து தகராறில் இளம்பெண் மானபங்கம் appeared first on Dinakaran.

Related Stories: