ேபாதை பொருள் கடத்தல் தடுக்க ருத்ரா புதிய மோப்ப நாய் பயிற்சிக்கு பின் சேர்க்கப்படும்வேலூர் மாவட்ட காவல்துறையில்

வேலூர், ஏப்.2: தமிழக காவல்துறையில் மோப்ப நாய் பிரிவு என்பது போதைப்பொருள் கடத்தல், வெடிபொருட்கள் மற்றும் கொலை, கொள்ளை போன்ற பிற குற்றச் செயல்களைக் கண்டறிய மோப்ப நாய்களைப் பயன்படுத்தும் ஒரு சிறப்பு பிரிவாகும். இந்த சிறப்பு பிரிவில் பணியாற்ற பல்வேறு பயிற்சிகள் அளித்து காவல்துறையில் இணைத்து கொள்ளப்படுகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் நடக்கும் குற்றங்களை தடுக்கவும் குற்றவாளிகளை கண்டறியவும் மோப்ப நாய்களின் பங்கு முக்கியமானதாக அமைகிறது. அதன்படி வேலூர் மாவட்ட காவல் துறையில் தற்போது 4 மோப்ப நாய்கள் உள்ளன.

அக்னி மற்றும் ரீட்டா மோப்ப நாய்கள் வெடிகுண்டு கண்டறிவதிலும், சாரா, போரா ஆகிய நாய்கள் கொலை, கொள்ளை போன்ற திருட்டு வழக்குகளிலும் துப்பறியவும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் புதிதாக 4 மாத பெண் நாய் வேலூர் மாவட்ட காவல்துறைக்கு துப்பறிய பயன்படுத்தப்பட உள்ளது. அந்த நாய்க்கு எஸ்பி மதிவாணன், ருத்ரா என்று பெயர் சூட்டி காவல்துறையில் இணைத்துக் கொண்டார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘மோப்ப நாய்க்கு போதை பொருட்கள் கடத்தலை தடுப்பது குறித்தும், அதை கண்டறியவும் சிறப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக 3 மாத பயிற்சி வேலூரிலும், அதைத் தொடர்ந்து ஜூன் மாதம் முதல் 6 மாதம் வரை சென்னையில் சிறப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சிக்கு பின் வேலூர் மாவட்ட காவல்துறையில் போதை பொருட்கள் கடத்தல் தடுக்க துப்பறியும் பணிக்காக இந்த மோப்ப நாய் பயன்படுத்தப்படும், என்றனர்.

The post ேபாதை பொருள் கடத்தல் தடுக்க ருத்ரா புதிய மோப்ப நாய் பயிற்சிக்கு பின் சேர்க்கப்படும்வேலூர் மாவட்ட காவல்துறையில் appeared first on Dinakaran.

Related Stories: