மதுரை, மார்ச் 30: அழகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இலந்தை பழம் சீசன் தொடங்கியுள்ளது. அழகர்கோவில் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளான அ.வல்லாளப்பட்டி, பாலமேடு, அலங்காநல்லூர், சத்திரப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கொய்யா, மா, சீத்தா உள்ளிட்ட பல்ேவறு பழங்கள் விளைச்சல் பெற்று பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் தற்போது இலந்தை பழம் சீசன் தொடங்கியுள்ளது.
அழகர்கோயில் பேருந்து நிலையம், சோலைமலை முருகன் கோயிலுக்கு செல்லும் மலை பாதைகளில் நடந்து செல்லும் பக்தர்கள் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் உள்ளிட்டோர் பிரியமுடன் இலந்தை பழத்தை ஆர்வமுடன் விரும்பி வாங்கி சென்று உண்ணுகின்றனர். ஒரு கிலோ ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ரூ.15க்கு தண்ணீர் கப்பீலும் விற்பனை செய்கின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ஒவ்வொரு சீசனுக் கும் ஒவ்வொரு பழங்களின் விற்பனைக்கு வரும். தற்போது இலந்தை பழம் சீசன் தொடங்கியுள்ளதால், விற்பனைக்கு வந்துள்ளது. புளிப்பு, துவர்ப்பு போன்ற சுவைகள் நிறைந்து மருத்துவ குணம் கொண்ட இலந்தை பழம் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சீசன் என்பதால் பக்தர்கள் மற்றம் ெபாதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.
The post அழகர்கோவில் பகுதியில் இலந்தை பழம் சீசன் தொடங்கியது appeared first on Dinakaran.