கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர்கள்

 

சத்தியமங்கலம், மார்ச் 29: தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் முக்கிய கோரிக்கைகளான ‌ பொது விநியோகத்திட்டத்திற்கு தனி துறை ஏற்படுத்துதல், தராசில் புளூடூத் இணைக்கப்படுவதால் ஏற்படும் தாமதம், ஊதிய உயர்வு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு இணையான ஊதியம், பாயிண்ட் ஆப் சேல் மெஷினில் சர்வர் கோளாறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு கவனத்தில் எடுத்து தீர்வு காண வலியுறுத்தி சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிவதாக ரேஷன் கடை பணியாளர்கள் தெரிவித்தனர்.

The post கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர்கள் appeared first on Dinakaran.

Related Stories: