ஈரோடு, மார்ச் 27: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நாளை மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது. இத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களில் இணைய வழி மூலம் விண்ணப்பிக்க வேண்டிய இனங்களை கண்டிப்பாக இணையவழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்கப்பட வேண்டும்.
இதர கோரிக்கைகளை மட்டுமே எழுத்துப்பூர்வமான மனுக்களாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். எனவே, இந்த கூட்டத்தில் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய குறைகளை மனுக்களாக தெரிவித்து பயன்பெறலாம்.
இத்தகவலை ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
The post மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.