பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவு; மாணவிகள் உற்சாக கொண்டாட்டம்

 

ஈரோடு, மார்ச் 26: ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவடைந்ததால் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் ஒருவருக்கொருவர் கட்டி தழுவி பிரியா விடை கொடுத்து சென்றனர். ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுதேர்வு கடந்த 3ம் தேதி துவங்கியது. இதில், இறுதி தேர்வாக நேற்று இயற்பியல், பொருளாதாரம், வேலை வாய்ப்பு திறன் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது.

இந்நிலையில், பிளஸ் 2 இறுதி தேர்வு நிறைவடைந்ததையொட்டி தேர்வு மையத்தை விட்டு நேற்று வெளியே வந்த மாணவ-மாணவிகள் உற்சாகமாக ஒருவருக்கொருவர் கட்டி தழுவி, செல்பி எடுத்து கொண்டனர். சில பள்ளிகளில் மாணவ-மாணவிகள் தேர்வு மையத்திற்கு வெளியே நடனமாடியும், நோட்டு பேப்பர்களை கிழித்து மேலே வீசியும் மகிழ்ந்தனர். பள்ளி படிப்பினை நிறைவு செய்த மாணவ-மாணவிகள் ஒருவருக்கொருவர் கட்டிதழுவி கண்ணீருடன் பிரியா விடை கூறி பிரிந்து சென்றதை காண முடிந்தது.

The post பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவு; மாணவிகள் உற்சாக கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: