அதை தொடர்ந்து அவர் நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்த உத்தரவிட்டார். அடுத்த மாதம் 28ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் தலையிட வாய்ப்பு உள்ளதாக கனடா உளவுப்பிரிவு அமைப்பான சிஎஸ்ஐஎஸ் அமைப்பின் துணை இயக்குனர் வனேசா லாயிட் கூறியுள்ளார். அவர் கூறுகையில்,’கனடாவில் வசிக்கும் பல்வேறு சமூகங்கள் மற்றும் நாட்டின் ஜனநாயக செயல்முறைகளில் தலையிடும் நோக்கமும் அதற்கான திறனையும் இந்திய அரசாங்கம் கொண்டுள்ளது என்பதை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.
அதே போல் இந்த தேர்தல்களில் ஏஐ டூல்களை சீனா பயன்படுத்த வாய்ப்புள்ளது. ரஷ்யா மற்றும் பாகிஸ்தானும் தேர்தல் பிரச்சாரத்தில் தலையிடலாம். வெளிநாட்டு குறுக்கீடு நடவடிக்கைகளை கண்டறிவது இன்னும் சவாலானது. சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி வலைத்தளங்களில் ரஷ்யா ஊடுருவலாம். இதற்கான சாத்தியம் உள்ளது. அதே போல் பாகிஸ்தானும் தனது நோக்கங்களுக்காக கனடா தேர்தலில் தலையிட சாத்தியம் உள்ளது’ என்றார்.
The post ஏப்.28ம் தேதி நடக்கும் கனடா தேர்தலில் இந்தியா தலையிடலாம்: உளவுப்பிரிவு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.