சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அரசாங்க நிர்வாகத்தில் ஊழியர்கள் குறைப்பு, செலவுகளை குறைக்கும் விதமாக செயல்திறன் துறையை உருவாக்கப்பட்டுள்ளது. பிரபல தொழிலதிபர் எலான் மஸ்கிற்கு அதன் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. எலான் மஸ்கிற்கு அரசாங்கத்தின் பல முக்கிய தகவல்களை பெறும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனங்களின் முன் கடந்த சில நாட்களாக பொது மக்கள் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் அமெரிக்கா முழுவதும் உள்ள டெஸ்லா நிறுவனங்களின் 277 ஷோரூம்களின் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதில் எலான் மஸ்க் பதவி விலக கோரிகோஷங்கள் எழுப்பப்பட்டன. சில இடங்களில் டெஸ்லா கார்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது.
The post எலான் மஸ்கை எதிர்த்து அமெரிக்கா முழுவதும் 277 இடங்களில் ஆர்பாட்டம் appeared first on Dinakaran.