டோங்கா தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7ஆக பதிவு

டோங்கா தீவுகளில் மாலை 5.48 மணிக்கு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7ஆக பதிவானது என ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7ஆக பதிவானது.

டோங்கா கடற்கரையில் மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீட்டர் வரை இந்த நிலநடுக்கம் ஆபத்தான சுனாமி அலைகளை உருவாக்கக்கூடும் என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி பசிபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா தீவுக்கு அருகில் அமைந்துள்ளது.

பிஜி, சமோவா உள்ளிட்ட பல அண்டை நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது என கூறப்படுகிறது. நிலநடுக்கம் காரணமாக டோங்கா தீவுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, 1–3 மீட்டர் (3–10 அடி) உயரம் வரை சுனாமி அலைகள் எழும்பும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post டோங்கா தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7ஆக பதிவு appeared first on Dinakaran.

Related Stories: