டெஸ்லா கார்கள் மீதும் அந்நிறுவனத்தின் மீதும் தாக்குதல் நடத்துவோர் அதற்கான நிதி அளிப்பவர்கள் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை உள்ளிட்ட விளைவுகளை சந்திக்கும் வாய்ப்பு அதிகம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் நங்கள் உங்களை தேடுகிறோம் என்று தனது சமூக வலைத்தளமான டுருத் சோசியல் பதிவில் அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் மீதான நாசவேலையை தொடர்ந்து வெள்ளை மாளிகையும் எலான் மஸ்க்க்கு வலுவான ஆதரவை தெரிவித்திருந்தது. தாக்குதல்களுக்கு யார் நிதி அளிக்கக்கூடும் என்பது குறித்து விசாரணைகளை தொடர்வதாக கூறியுள்ளது. ட்ரம்ப் பதவி ஏற்றதிலிருந்து அரசாங்க செலவினங்களை குறைக்கும் சர்ச்சைக்குரிய அமைப்பான அரசு செயல்திறன் துறை பதவியை எலான் மஸ்க்கிற்கு வழங்கியதிலிருந்து இது போன்ற தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அரசு துறைகளில் ஆட்குறைப்பு போன்ற எலான் மஸ்க்கின் யோசனையால் வேலை இழந்த பலர் டெஸ்லா நிறுவனதிற்க்கு எதிரான போராட்டங்களில் குதித்துள்ளனர்.
மின்சார வாகனங்களை முன்னோடியாக கொண்டு இடதுசாரிகளிடமிருந்து ஆதரவை பெற்ற நிறுவனமான டெஸ்லா தற்போது எதிர்ப்பையும் சந்தித்துள்ளது. ட்ரம்ப் உடனான மஸ்கின் நெருக்கமான நட்பு அதிகரித்து வருவதும் டிவீட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியதும் அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு கொடுத்த ஆதரவும் இடதுசாரிகளிடையே எதிர்ப்பை எழ முக்கிய காரணங்களாக அமைந்திருந்தன தாக்குதல்கள் குறித்து பேசிய டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், இடது சாரி பில்லியனர்களால் திட்டமிடப்பட்டு நிதி அளிக்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார். வன்முறையை பயங்கரவாதம் என குறிப்பிட்டதோடு, பைத்தியக்காரத்தனமானது என்றும் தவறானது என்றும் கண்டித்துள்ளார். டெஸ்லா நிறுவனத்திற்கு எதிரான போராட்டமும் அதற்கு எதிராக ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருப்பதும் சர்வதேச அளவில் சூடான விவாதங்களை கிளப்பி உள்ளது.
The post டெஸ்லாவை சீண்டினால் 20 வருடம் சிறை: நாங்கள் உங்களை தேடுகிறோம்’ என்று ட்ரூத் சோஷியல் பதிவில் ட்ரம்ப் எச்சரிக்கை appeared first on Dinakaran.