கீவ்: அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையீட்டின் பேரில், உக்ரைன் மற்றும் ரஷ்யா வரையறுக்கப்பட்ட போர் நிறுத்தக் கொள்கைக்கு ஒப்புக்கொண்டுள்ளன. எனினும் ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றது. நேற்று முன்தினம் இரவு உக்ரைனின் சபோரிஜியா நகரத்தின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. குடியிருப்புக்கட்டிடங்கள், சமூக உள்கட்டமைப்புக்கள், தனியார் கார்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் சுமார் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் மீட்பு குழுவினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுவது, ஆம்புலன்ஸ்கள் விரைவது உள்ளிட்ட காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யா சுமார் 179 வெடிக்கும் டிரோன்களை ஏவியுள்ளது. இதில் சுமார் 100 டிரோன்கள் இடைமறிக்கப்பட்டதாகவும், 63டிரோன்கள் காணாமல் போனதாகவும் உக்ரைனின் விமான படை தெரிவித்துள்ளது. இதனிடையே ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம், 47 உக்ரேனிய டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது.
The post போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்ட பின்னரும் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 3 பேர் பலி appeared first on Dinakaran.