இந்நிலையில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இல்லாமல் நாட்டிற்குள் நுழையும் புலம்பெயர்ந்த குழந்தைகளுக்கு சட்ட உதவி வழங்கும் ஒப்பந்தத்தை டிரம்ப் நிர்வாகம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இதனால் குழந்தைகள் சிக்கலான சட்ட அமைப்பை தனியாக கையாள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அகாசியா நிறுவனத்தின் தலைவர் ஐலின் பியூக்ஸ் கூறுகையில், ‘‘ சுமார் 26ஆயிரம் குழந்தைகளின் வழக்கறிஞர்களுக்கு பணம் செலுத்துவது உட்பட மையம் மேற்கொள்ளும் அனைத்து சட்டப்பணிகளையும் நிறுத்தப்பட்டுள்ளது. இது மிகவும் கவலைக்குரியது” என்றார்.
The post அமெரிக்க அதிபர் டிரம்ப் தடாலடி; புலம்பெயர்ந்த குழந்தைகளுக்கான சட்ட உதவி நிறுத்தம் appeared first on Dinakaran.