பைக் மீது பேருந்து உரசியதில் வெல்டர் பலி

பாகூர், மார்ச் 20: புதுச்சேரி முதலியார்பேட்டை அடுத்த கொம்பாக்கம் மாதா கோயில் வீதியைச் சேர்ந்தவர் சுகானந்தம் (45). வெல்டிங் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த இவரது நண்பர் பாலபாஸ்கரன் (41). இருவரும் பைக்கில் சொந்த வேலை காரணமாக தவளகுப்பம் சென்று விட்டு மீண்டும் கொம்பாக்கம் வந்து கொண்டிருந்தனர். பாலபாஸ்கரன் பைக்கை ஓட்டி வந்தார். அவருக்கு பின்னால் சுதானந்தம் அமர்ந்து கொண்டு வந்தார். கடலூர்-புதுச்சேரி சாலை நோணாங்குப்பம், டோல்கேட், கோயிலின் அருகே வரும்போது இவர்களுக்கு பின்னால் வந்த பேருந்து இவர்கள் மீது உரசியபடி சென்றுள்ளது. இதில் பாலபாஸ்கரன் பைக் நிலை தடுமாறி எதிரில் சென்ற பைக் மீது மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர். சாலையில் விழுந்த இருவரும் படுகாயம் அடைந்ததை பார்த்த அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலையில் படுகாயமடைந்த சுகானந்தம் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். பாலபாஸ்கரன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின்பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பைக் மீது பேருந்து உரசியதில் வெல்டர் பலி appeared first on Dinakaran.

Related Stories: