கரூர், மார்ச் 12: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஒய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுந்தரகணேசன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் காத்தமுத்து வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் கோபால், நிர்வாகிகள் சீத்தாபதி, முத்துச்சாமி, குழந்தை உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு பேசினர், மாவட்ட பொருளாளர் ராமசாமி நன்றி கூறினார். 70 வயது ஒய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஒய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் முழுச் செலவையும் அரசே ஏற்க வேண்டும். பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கம்யூட்டேசன் தொகை பிடிக்கும் காலத்தை 10 ஆண்டாக குறைக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
The post கரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.