தோகைமலை, மார்ச் 11: தோகைமலை அருகே ஆர்ச்சம்பட்டியில் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆர்ச்சம்பட்டி ஊராட்சி ஆர்ச்சம்பட்டி மேற்குதெரு முருகேசன் மகள் சிவரஞ்சனி (21). இவர் 10ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு கடந்த 5 வருடமாக தனியார் நிறுவனத்தில் டைலரிங் வேலை செய்து வந்து உள்ளார். இந்நிலையில் கடந்த 9ம் தேதி, காலை 5 மணி அளவில் சிவரஞ்சனி தனது வீட்டில் இருந்து வெளியில் சென்று உள்ளார்.
பின்னர் வெகுநேரமாகியும் சிவரஞ்சனி, வீடு திரும்பவில்லை. சிவரஞ்சனியின் பெற்றோர்கள் தங்களது உறவினர்கள் வீடுகள் மற்றும் சிவரஞ்சனியின் தோழிகள் வீடுகளில் தேடியும் சிவரஞ்சனி குறித்து தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சிவரஞ்சனி கடத்தப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் விவகாரமா? என தீவிரமாக விசாரிக்கின்றனர்.
The post தோகைமலை அருகே இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.