இரண்டு வகையான ஊர்வலங்கள் நடைபெறுகின்றன. ஷாஜஹான்பூரின் ஹோலியில், ‘படே லாட் சாஹேப் (பெரிய நவாப்), சோட்டே லாட் சாஹேப் (சிறிய நவாப்)’ என இரண்டு ஊர்வலங்கள் நடைபெறுகின்றன. இவை தொடங்குவதற்கு முன், நகரத்தில் உள்ள அனைத்து மசூதிகளும் பிளாஸ்டிக் மற்றும் தார்பாய்களால் முழுமையாகப் போர்த்தி மூடப்பட்டுள்ளன. ஹோலி பண்டிகை நாளான இன்று வெள்ளிக்கிழமை தொழுகையும் வந்துள்ளதால், வடமாநிலங்களில் இரு சமூகத்தினரிடையே பதற்றத்தை தணிக் கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளத.
ஹோலியும், ரம்ஜான் நோம்பின் வெள்ளிக்கிழமையும் ஒரே நாளில் கடந்த 64 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. தற்போது ஒரே நாளில் வந்துள்ளதால், சிறுபான்மையினர் மக்கள் வாழும் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சம்பலில் உள்ள ஷாஹி ஜமா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஹோலி மற்றும் வெள்ளிக்கிழமை தொழுகை தொடர்பாக இரு சமூக மக்களும் சகோதரத்துவ சூழலைப் பேண வேண்டும் என்று இரு சமூக தலைவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஹோலி பண்டிகையின் போது சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரபிரதேச டிஐஜி சைலேஷ் குமார் பாண்டே தெரிவித்தார். இதற்காக, சமூக ஊடகங்கள் முழுமையாக கண்காணிக்கப்படுவதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
The post 64 ஆண்டுகளுக்கு பின் இன்று ஒரே நாளில் ஹோலி வெள்ளிக்கிழமை தொழுகை; வட மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு appeared first on Dinakaran.