பட்ஜெட் இலச்சினையில் ரூ.என்று மாறிய ரூ.தமிழக முதல்வரின் புரட்சிகரமான முடிவுக்கு பாராட்டு: கன்னட அமைப்பு தலைவர் கடிதம்

பெங்களூரு: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக ரக்‌ஷணா வேதிகே தலைவர் டி.ஏ.நாராயணகவுடா எழுதியுள்ள கடிதத்தில், ‘தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு ஒரு நாள் முன்பாக இந்திய அரசு கடந்த 16 ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் தேவநாகிரி குறியீட்டை கைவிட்டு, அதற்கு பதிலாக தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் ரூ. என்ற எழுத்தை பயன்படுத்தும் உறுதியான தீர்மானம் எடுத்துள்ளீர்கள். ஒரு பெருமைக்குரிய இந்திய குடிமகனாகவும் கன்னடனாகவும் உங்களின் நடவடிக்கையை இதயபூர்வமாக வரவேற்கிறேன். உங்களின் உறுதியான செயல்பாட்டை பாராட்டுகிறேன்.

உங்களின் செயல்பாட்டிற்கு எவ்வளவு எதிர்ப்பு வரட்டும், மிரட்டல்கள் வந்தாலும் வடமாநிலத்தின் இந்தி திணிப்புக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் உங்களின் உறுதி நிச்சயம் பாராட்ட வேண்டியதாகும். மொழி அடிப்படையில் தென்மாநிலங்களை நிரந்தர அடிமைகளாக மாற்ற வடமாநில இந்தி விசுவாசிகள் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள். அதை எதிர்த்து தமிழ்நாட்டில் திராவிட போராட்டம் நடத்தி வருவது தென்மாநில திராவிட மொழியினருக்கு பெருமையாக உள்ளது. மொழி, பண்பாடு, கலாசாரம் ஆகிய உணர்வுடன் மாநிலங்கள் இணைந்து காப்பாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post பட்ஜெட் இலச்சினையில் ரூ.என்று மாறிய ரூ.தமிழக முதல்வரின் புரட்சிகரமான முடிவுக்கு பாராட்டு: கன்னட அமைப்பு தலைவர் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: