கோட்டூர்புரம் இரட்டைக் கொலை வழக்கில் 13 பேரை கைது செய்தது காவல்துறை

சென்னை: சென்னை கோட்டூர்புரம் இரட்டைக் கொலை வழக்கில் 13 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ரகசிய இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று ரவுடிகள் 2 பேரை மர்ம கும்பல் வெட்டிக் கொன்று விட்டு தப்பி ஓடியது.

தொழில் போட்டி, முன் விரோதம் உள்ளிட்ட காரணங்களால், ரவுடிகள் பழிதீர்க்கும் படலம் சென்னையில் தொடர்கிறது. கோட்டூர்புரம்,சித்ரா நகர், ‘யு பிளாக்’ குடியிருப்பில் வசித்தவர் அருண், 25; ரவுடி. இவர் மீது, கொலை உட்பட ஆறு வழக்குகள் உள்ளன. அவரது அண்ணன் அர்ஜுனன், 27. சகோதரர்கள் இருவரும்,நேற்று முன்தினம், கோட்டூர்புரத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையைச் சேர்ந்த ரவுடி சுரேஷுடன் சேர்ந்து, மது அருந்தி உள்ளனர். அதன் பின்னர் இரவு, 9:30 மணியளவில், போதையில், கோட்டூர்புரம் சித்ரா நகரில் உள்ள நாகவல்லி கோவில் அருகே, மூவரும் உறங்கினர்.

அப்போது, நான்கு இருசக்கர வாகனங்களில் வந்த எட்டு பேர், அரிவாளால் அருண், சுரேஷை கொடூரமாக வெட்டி விட்டு தப்பினர். வெட்டுப்பட்ட இருவரின் அலறல் கேட்டு எழுந்த அர்ஜுனன், சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றனர். அங்கு சுரேஷ் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். உயிருக்கு போராடிய அருணை மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில், அருண் உயிர் இழந்தார்.

இச்சம்பவம் குறித்து, கோட்டூர்புரம் போலீசார், கொலை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். கொலைகள் நடந்த இடம் அருகே உள்ள, ‘சிசிடிவி’ காட்சிகளை ஆய்வு செய்தனர். நான்கு இரு சக்கர வாகனத்தில் எட்டு பேர் வந்து, அருண், சுரேஷ் ஆகியோரை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக, 10 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கோட்டூர்புரத்தில் நடந்த இரட்டை கொலை வழக்கில் இதுவரை 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

The post கோட்டூர்புரம் இரட்டைக் கொலை வழக்கில் 13 பேரை கைது செய்தது காவல்துறை appeared first on Dinakaran.

Related Stories: