அப்போது கற்பகத்திற்கு பெரம்பூர் கென்னடி ஸ்கொயர் பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (30) என்ற ஆட்டோ ஓட்டுநருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறி பிரேம்குமார் வீட்டில் இல்லாதபோது ஹரி கிருஷ்ணன் கற்பகம் வீட்டிற்கு சென்று இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஹரி கிருஷ்ணன் குடிபோதைக்கு அடிமையாகி அடிக்கடி கற்பகத்தை டார்ச்சர் செய்ய ஆரம்பித்துள்ளார். போன் செய்தால் எடுக்க வேண்டும், எப்போது அழைத்தாலும் வரவேண்டும் என தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் கற்பகம் அரிகிருஷ்ணனை தவிர்க்க முயற்சி செய்துள்ளார்.
ஆனால் அதுபோன்ற நேரங்களில் ஹரிகிருஷ்ணன் கற்பகத்தின் வீட்டிற்கே சென்று கற்பகத்தை அடித்து துன்புறுத்தி உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் ஹரிகிருஷ்ணன் கற்பகத்திற்கு போன் செய்துள்ளார். கற்பகம் போனை எடுக்காததால் ஹரிகிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் கற்பகம் வீட்டிற்கு சென்று கற்பகத்தை அடித்துள்ளார். இதனால் காயமடைந்த கற்பகம் செங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பார்க்க சென்றுள்ளார்.
அங்கும் சென்ற ஹரிகிருஷ்ணன் கற்பகத்தை அடித்துள்ளார். அப்போது அங்கு வந்த போலீசார் குடிபோதையில் இருந்த ஹரி கிருஷ்ணனை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் அங்கிருந்து கற்பகம் கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பார்த்துள்ளார். அவரை பின்தொடர்ந்து வந்த ஹரிகிருஷ்ணன் பெரியார் நகர் மருத்துவமனையில் வைத்து கற்பகத்தை சரமாரியாக தாக்கியுள்ளார்.
அப்போது கற்பகத்தின் மூத்த மகன் தனது தந்தை பிரேம்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு அம்மாவை யாரோ வந்து அடிக்கிறார்கள் எனக் கூறியுள்ளார். இதனால் பிரேம்குமார் வீட்டில் இருந்து கத்தியை கொண்டு வந்து பெரியார் நகர் மருத்துவமனையில் வெளியே நின்றிருந்த ஹரிகிருஷ்ணனை சரமாரியாக வெட்டினார். இதில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் பலத்த வெட்டு காயமடைந்த ஹரிகிருஷ்ணன் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் ஏற்கனவே ஹரிகிருஷ்ணன் தாக்கியதில் காயமடைந்த கற்பகம் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்த பெரவள்ளூர் போலீசார் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்குச் சென்று பிரேம்குமாரை கைது செய்து அவரிடம் இருந்த ஒரு கத்தியையும் பறிமுதல் செய்தனர். பிரேம்குமாருக்கு தனது மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் குறித்து ஏற்கனவே தெரியவந்துள்ளது.
இதனால் அவ்வப்போது கற்பகத்தை அவர் எச்சரித்துள்ளார். தம்பதிக்குள் சண்டை ஏற்பட்டு கடந்த ஒரு மாதமாக இருவரும் பேசாமல் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் எல்லை மீறிய ஹரிகிருஷ்ணனை பிரேம்குமார் சரமாரியாக வெட்டியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து பிரேம்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post மருத்துவமனையின் வெளியே வைத்து மனைவியின் கள்ளக்காதலனை சரமாரியாக வெட்டிய கணவன்: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை appeared first on Dinakaran.