பணம் வைத்து சூதாட்டம்: 8 பேர் சிக்கினர்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகவேல் மற்றும் போலீசார் கீழ்நல்லாத்தூர் கோமதி நகர், மணவாளநகர், பாக்குப்பேட்டை ஆகிய இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பாக்குப்பேட்டை தைலந்தோப்பில் சூதாட்டம் நடைபெறுவதாக ரகசிய தகவல் வந்தது. உடனே அங்கு சென்று பார்த்தபோது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரும் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதனையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட தொடுகாடு கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் (42), செங்காடு கிராமத்தைச் சேர்ந்த வரதன் (42), பாபு (27), ராஜ் (30), யாபேஸ் ராஜ் (38), மணிகண்டன் (33), அழிஞ்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் (35), செங்காடு கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் (35) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ1.16 லட்சம் ரொக்கம், 6 பைக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பணம் வைத்து சூதாட்டம்: 8 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.

Related Stories: