சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்: அரையிறுதியில் இலங்கை-வெ.இ மோதல்

ராய்பூர்: முன்னாள் வீரரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்(ஐஎம்எல்) டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று 2வது அரையிறுதி ஆட்டம் நடக்கிறது. இதில் லீக் சுற்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்த இலங்கையும், 4வது இடம் பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் மோதுகின்றன. சங்கக்கரா தலைமையிலான இலங்கை அணி தான் விளையாடிய 5 லீக் ஆட்டங்களில் இந்தியாவை போல் 4 ஆட்டங்களில் தான் வென்றது. எனினும் ரன் ரேட் அடிப்படையில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது. அதே வேகத்துடன் இன்று பிரைன் லாரா தலைமையிலான வெ.இ அணியை எதிர்கொள்கிறது.

இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெ.இ 21ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதற்கு பதிலடி தர வெ.இ அதிரடி ஆட்டக்காரரான ‘யுனிவர்சல் பாஸ்’ கிறிஸ் கேல் உள்ளிட்ட வீரர்கள் கூடுதல் வேகம் காட்ட வேண்டும். அதே நேரத்தில் இதற்கு முன் விளையாடிய 4 மாஸ்டர்ஸ் ஆட்டங்களில் இலங்கை 3 ஆட்டங்களில் 2, 19, 21ரன் வித்தியாசங்களில் வென்றுள்ளது. ஒரே ஒரு ஆட்டத்தில் வெ.இ 1ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது. ஆக இந்த 4 ஆட்டங்களிலும் முதலில் பேட்டிங் செய்த அணிதான் வென்றுள்ளது. அதனால் இன்றைய ஆட்டத்தில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கக்கூடும்.

The post சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்: அரையிறுதியில் இலங்கை-வெ.இ மோதல் appeared first on Dinakaran.

Related Stories: