தொடர்ந்து 3வது முறையாக லீக் சுற்றில் டெல்லி முதலிடம் பிடித்துள்ளது. தவிர, நடப்புத் தொடரின் லீக் சுற்றில் இந்த 2 அணிகளும் 2 முறை மோதி உள்ளன. முதல் ஆட்டத்தில் டெல்லி போராடி 2 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி பந்தில் வெற்றியை வசப்படுத்தியது. தொடர்ந்து 2வது ஆட்டத்தில் 33பந்துகள் மிச்சமிருந்த நிலையில் 9 விக்கெட வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்தது. அதனால் இன்றைய ஆட்டத்திலும் மெக் லேனிங் தலைமையிலான டெல்லியின் கை ஓங்குவதற்கான வாய்ப்பு அதிகம்.
அதற்கேற்ப, அணியில் ஜெமீமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, அன்னபெல் சதர்லேண்ட், ஜெஸ் ஜோனஸ்ஸன், மின்னு மணி, ஷிகா பாண்டே என அதிரடி வீராங்கனைகளுக்கு பஞ்சமில்லை. அதே நேரத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பையையும் குறைத்து மதிப்பிட முடியாது. அந்த அணியிலும் அமிலியா கெர், நடாலியா புருன்ட், அமன்ஜோத் கவுர், ஹேலி மேத்யூஸ், ஷப்னிம் இஸ்மாயில், தமிழ்நாட்டின் இளம் வீராங்கனைகள் கமலினி குணாளன், கீர்த்தனா பாலகிருஷ்ணன் என அதிரடிகளுக்கு குறைவில்லை.
இந்த 2 அணிகளும் 2வது முறையாக டபிள்யூபிஎல் பைனலில் மோதுகின்றன. ஏற்கனவே, 2023ம் ஆண்டு இறுதி போட்டியில், மும்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளது. ஏற்கனவே நடந்த 2 டபிள்யூபிஎல் இறுதி ஆட்டத்திலும் விளையாடி உள்ள டெல்லி 3வது முறையாக ஹாட்ரிக் பைனலில் களம் காண உள்ளது.
The post டபிள்யுபிஎல் இறுதிப் போட்டி வெற்றி கோப்பை யாருக்கு? மும்பை – டெல்லி இன்று மோதல் appeared first on Dinakaran.