ஆடவர் பிரிவு அரையிறுதியில் அட்டகாச அல்காரஸ் மிரட்டல் ஜேக் டிரேப்பர்: மெத்வதெவ், ரூனேவும் தகுதி

இண்டியன் வெல்ஸ், ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் நேற்று, ஸ்பெயினை சேர்ந்த உலகின் 3ம் நிலை வீரர் கார்லோஸ் அல்காரஸ், அர்ஜென்டினா வீரர் பிரான்சிஸ்கோ செருண்டோலா மோதினர். முதல் செட்டை எளிதில் கைப்பற்றிய அல்காரஸ், 2வது செட்டை போராடி வசப்படுத்தினார். அதனால், 6-3, 7-6 என்ற நேர் செட்களில் அவர் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு காலிறுதியில் ரஷ்யாவை சேர்ந்த உலகின் 5ம் நிலை வீரர் டேனியில் மெத்வதெவ், பிரான்ஸ் வீரர் ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார். முதல் இரு செட்களில் தலா ஒன்றை இருவரும் கைப்பற்ற 3வது செட் விறுவிறுப்பாக நடந்தது. அதை மெத்வதெவ் வசப்படுத்தினார். அதனால், 6-4, 2-6, 7-6 என்ற செட் கணக்கில் மெத்வதெவ் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

இன்னொரு காலிறுதியில் பிரிட்டன் வீரர் ஜேக் அலெக்சாண்டர் டிரேப்பர், 7-5, 6-4 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் பெஞ்சமின் ஷெல்டனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடக்கும் அரையிறுதிப் போட்டிகளில், ஜேக் டிரேப்பர் – அல்காரஸ், மெத்வதெவ் – டென்மார்க் வீரர் ஹோல்கர் ரூனே மோதுகின்றனர்.

The post ஆடவர் பிரிவு அரையிறுதியில் அட்டகாச அல்காரஸ் மிரட்டல் ஜேக் டிரேப்பர்: மெத்வதெவ், ரூனேவும் தகுதி appeared first on Dinakaran.

Related Stories: