ஐசிசி டாப் 10ல் 4 இந்தியர் 3ம் இடத்தில் ரோகித்: முதலிடத்தில் தொடரும் கில்

லண்டன்: ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டி முடிந்ததை அடுத்து ஒருநாள் போட்டி வீரர்களுக்கான தரவரிசையில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பேட்டிங் தரவரிசையில் 784 புள்ளிகளுடன் சுப்மன் கில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். சாம்பியன் கோப்பையில் அசத்திய ரோகித் சர்மா 2 நிலை முன்னேறி 756 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்துள்ளார்.

ஆனால் விராட் கோஹ்லி ஒரு நிலை பின்தங்கி 736 புள்ளிகளுடன் 4வது இடத்திலும், ஸ்ரேயாஸ் ஐயர் 704 புள்ளிகளுடன் 8வது இடத்திலும் உள்ளனர். பேட்ஸ்மேன்களுக்கான டாப் 10 இடங்களில் இந்திய வீரர்கள் 4 பேர் இருக்கின்றனர். இடையில் 2வது இடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசம் (770 புள்ளிகள்), தென் ஆப்ரிக்கா வீரர் ஹென்ரிச் கிளாஸ்ஸன் (744புள்ளிகள்) 4 வது இடத்தில் உள்ளனர்.

The post ஐசிசி டாப் 10ல் 4 இந்தியர் 3ம் இடத்தில் ரோகித்: முதலிடத்தில் தொடரும் கில் appeared first on Dinakaran.

Related Stories: