அக்சர் படேல் இதுவரை 150 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, சுமார் 131 ஸ்ட்ரைக் ரேட்டில் 1653 ரன்கள் எடுத்துள்ளார். அக்சர் பந்துவீச்சிலும் சிறந்து விளங்கி, 7.28 என்ற எகானமியில் 123 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
கடந்த 7 ஆண்டுகளாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் அக்சர், தனது ஆல்ரவுண்ட் ஆட்டத்தால் டெல்லி கேபிடல்ஸ் அணியின் முதுகெலும்பாக மாறியுள்ளார். கேப்டனாக அனுபவம் இல்லாத போதிலும், டெல்லி அணி அக்சரை அணியின் கேப்டனாக நியமித்துள்ளது. தலைமைத்துவத்தில் அதிக அனுபவம் கொண்ட கே.எல். ராகுல் முன்னணியில் இருந்தபோதிலும், அந்தப் பட்டம் அக்சருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு கேப்டனாக பணியாற்றிய அனுபவமும் ராகுல்க்கு உள்ளது. அதனால்தான் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் பதவியை அவரிடம் ஒப்படைப்பது குறித்து பேச்சு எழுந்தது. ஆனால் அவர் அணியை வழிநடத்த மறுத்துவிட்டதாக செய்திகள் ஏற்கனவே வெளிவந்திருந்தன.
டெல்லி கேபிடல்ஸ் அணி: அக்சர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரெல், மிட்செல் ஸ்டார்க், கே.எல். ராகுல், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், டி. நடராஜன், கருண் நாயர், சமீர் ரிஸ்வி, அசுதோஷ் சர்மா, மோஹித் சர்மா, ஃபாஃப் டு பிளெசிஸ், முகேஷ் குமார், தர்ஷன் நல்கண்டே, விபராஜ் நிகம், துஷ்மந்த சமீர, மாதவ் திவாரி, திரிபூர்ணா விஜய், மன்வந்த் குமார், அஜய் மொண்டல், டோனோவன் ஃபெரீரா.
The post டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக அக்சர் படேல் நியமனம்! appeared first on Dinakaran.