தண்டராம்பட்டு, மார்ச் 6: ஊராட்சிகளில் குறைந்த அளவே வரி வசூல் செய்யும் செயலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்படும் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் எச்சரித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு பிடிஓ அலுவலகத்தில் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் வரி வசூல் குறித்து பிடிஓ, துணை பிடிஓ, பணி மேற்பார்வையாளர், ஊராட்சி செயலாளர் உடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் 47 ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் தங்களது ஊராட்சிகளில் செய்யப்பட்ட வரி வசூல் குறித்து கேட்டறிந்தார். ஒவ்வொரு ஊராட்சிகளில் எவ்வளவு வரி இனங்கள் ஆன்லைனில் செலுத்தப்பட்டது என்ற விவரங்களை ஆய்வு செய்தார்.
மேலும் வரி இனங்களை அதிகம் வசூல் செய்து ஆன்லைன் மூலம் கட்டப்பட்டுள்ளது குறித்து விசாரணை நடத்தினார். பின்னர் குறைந்த அளவு வசூல் செய்து கட்டிய ஊராட்சி செயலாளர்கள் மாதக் கடைசியில் மீண்டும் இதுபோன்ற கூட்டம் நடத்தப்படும். அந்தக் கூட்டத்தில் குறைந்த வரி வசூல் செய்து கட்டிய ஊராட்சி செயலாளர்கள், மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாற்றம் செய்யப்படும். அதற்கு மேலாக வசூல் செய்தவர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணியிட மாற்றம் செய்யப்படும் என கூறினார். எனவே உங்கள் ஊராட்சியில் செயல்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இந்த ஆலோசனை கூட்டத்தில் திட்ட இயக்குனர் மணி, பிடிஓக்கள் ரவீந்திரநாதன், பரிமேலழகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
The post வரி வசூல் செய்யும் செயலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்படும் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் எச்சரிக்கை ஊராட்சிகளில் குறைந்த அளவே appeared first on Dinakaran.