பொன்னேரி: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் ஆலோசனைப்படி, மீஞ்சூர் பேரூர் திமுக சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று மாலை மீஞ்சூர் பேரூர் செயலாளர் தமிழ்உதயன் தலைமையில் நடைபெற்றது, இதில் இன்று திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் பகுதியில் முதல்வர் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து நிர்வாகிகளும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கினார். இதில் பேரூர் கழக முக்கிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் காணியம்பாக்கம் ரங்கநாதர் கோயில் அருகே உள்ள திமுக அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது.
நிர்வாகிகள் பாண்டுரங்கன், தன்சிங், குமார், ஸ்டாலின், குணாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அண்ணா தாசன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில், முதல்வரை வரவேற்க 40 வேன், கார்களில் செல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் நிர்வாகிகள் தேவராஜ், ராஜேஷ், ஹரி, ரஜினி முருகன், துரைவேலு, அமுதா, கோமளா, நிர்மலா, லட்சுமி, நேதாஜி, ராம்கி, ஞானவேல், மோகன், பழனி, மணி, அருள், பாலையா, வெங்கடேசன், ஏழுமலை, ரவி, சேகர், மலையப்பன், மகேஷ், ஆதிகேசவன், தத்தை பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post மீஞ்சூர் பேரூர் திமுக சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் appeared first on Dinakaran.