மேலும், நகர்ப்புற பகுதிகளில் பட்டாக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட நெடுங்காலமாக வீடு கட்டி குடியிருக்கும் 214 பேருக்கு நிலங்களை வரன்முறைப்படுத்தி பட்டாக்கள் வழங்கி, திட்டத்தை தொடங்கி வைத்தார். குறிப்பாக, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஆப்பூர் ஊராட்சிக்குட்பட்ட தாளிமங்களம் கிராமத்தில் ரூ.6 கோடி செலவில் மலக்கசடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சமுதாயக்கூடம், அங்கன்வாடி மைய கட்டிடங்கள், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், தானிய கிடங்கு, பொது சுகாதார நிலைய கட்டிடம், நியாய விலை கடை, நூலக கட்டிடங்கள், துணை சுகாதார நிலைய கட்டிடங்கள், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அலுவலக கட்டிடம் என 47 முடிவுற்ற பணிகளை முதல்வர் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சி பகுதியில் ரூ.488 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் சேகரிப்பு கட்டமைப்பு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், செங்கல்பட்டு நகராட்சியில் வணிக வளாகக் கட்டிடம் கட்டும் பணி, முகாம் அலுவலக கட்டிடம் என 5 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். பின்னர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 13,966 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள், 628 பயனாளிகளுக்கு முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை, திருமண உதவித் தொகை, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகையையும் முதல்வர் வழங்கினார்.
மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில் 63 பயனாளிகளுக்கு பழங்குடியினருக்கான வீடு வழங்குதல், 287 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு வழங்குதல், மகளிர் திட்டம் சார்பில் 25,356 பயனாளிகளுக்கு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்பு, மகளிர் தொழில் முனைவோர் தனிநபர் கடன், கோழி மற்றும் ஆடு வளர்ப்பு, மீன்வள மதிப்புக்கூட்டு குழு, ஒருங்கிணைந்த பண்ணை தொகுப்பு, காய்கறி பண்ணை தொகுப்பு, கிராமப்புற தொழில்முனைவோர் திட்டம், முதியோர் சுய உதவிக்குழு, அமுத சுரபி நிதி, சுழல் நிதி போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் உதவிகள், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 2,600 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் மண்ணுயிர் காப்போம் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம், நுண்ணீர் பாசனத் திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் போன்ற திட்டங்களில் உதவிகள், தோட்டக்கலை துறை சார்பில் 744 பயனாளிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணை திட்டம்,
நடமாடும் காய்கறி விற்பனை வண்டி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 523 பயனாளிகளுக்கு, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் மொபட், நவீன காதொலி கருவி, நவீன செயற்கை அவயம், எல்போ ஊன்றுகோல், சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம், சிறப்பு சக்கர நாற்காலி, திறன்பேசி, மடக்கு குச்சி, கருப்புக்கண்ணாடி, வங்கி கடன் மானியம், தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை, கல்வி உதவித் தொகை போன்ற திட்டங்களின் கீழ் உதவிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் 509 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி திட்டங்கள், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் வைப்பீடு, சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் ஆகிய திட்டங்களில் உதவிகள் என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.508 கோடியே 3 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 50,606 பயனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து காரில் சென்றார். அவர் செல்லும் வழிநெடுகிலும் பொதுமக்கள் எழுச்சியுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை செங்கல்பட்டு தொகுதி திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் செய்திருந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் திருக்கழுக்குன்றத்தில் இருந்து நீண்டதூரம் நடந்து சென்று பெண்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அளித்த உற்சாக வரவேற்பினை ஏற்றுக் கொண்டு, அவர்களுடன் உரையாடி, பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பொதுமக்கள் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
The post செங்கல்பட்டில் நடந்த அரசு விழாவில் ரூ.508 கோடியில் 50,606 பேருக்கு நலத்திட்ட உதவிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்: புதிதாக 5 பணிகளுக்கு அடிக்கல்; முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.