பூந்தமல்லி: பவுர்ணமியை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை நேற்று அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக, ஒரு கிலோ மல்லி ரூ.450க்கும், ஐஸ் மல்லி ரூ.360க்கும், ஜாதிமல்லி மற்றும் முல்லை ரூ.300க்கும், கனகாம்பரம் ரூ.400க்கும், அரளி பூ ரூ.200க்கும், பன்னீர் ரோஸ் ரூ.120க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.160க்கும், சாமந்தி ரூ.100க்கும், சம்பங்கி ரூ.250க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘வரத்து குறைவு மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு, பூக்களின் விலை சற்று அதிகரித்துள்ளது,’ என்றார்.
The post கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரிப்பு appeared first on Dinakaran.