மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

திருவள்ளூர்: திருவள்ளுரில் திமுக மாவட்டச் செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ, தலைமை செயற்குழு உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ அறிவுரையின் பேரில் முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு கோடைகால நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆணழகன் டி.ஆர்.திலீபன் ஏற்பாட்டில் நடந்தது. இதில், நகரச் செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் முன்னிலை வகித்தார். அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பங்கேற்று நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், நீர்மோர், வெள்ளரிக்காய், முலாம்பழம் மற்றும் குளிர்பானங்களை வழங்கினார். முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு மாதம் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஏழை எளியோருக்கு அறுசுவை பிரியாணியும் வழங்கினார். இதில் மாவட்ட அவைத் தலைவர் கே.திராவிட பக்தன், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் ஆர்டிஇ.ஆதிசேஷன், மாவட்ட துணைச் செயலாளர் குமரன் மற்றும் நகர நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள், நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

The post மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: