திருத்தணி: முதல்வர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் திருத்தணி ம.கிரண் ஏற்பாட்டில், திருத்தணியில் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர், திருத்தணி எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அப்துல் மாலிக் முன்னிலை வகித்தார். திருத்தணி நகரச் செயலாளர் வினோத் குமார் வரவேற்றார். இக்கூட்டத்தில் அமைச்சர் சா.மு.நாசர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். தொடர்ந்து, திராவிட எழுத்தாளர் மதிமாறன் விளக்க உரையாற்றினார். கூட்டத்தில் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பூபதி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
The post திமுக இளைஞரணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.