அரவக்குறிச்சி, மார்ச் 6: தேசிய பசுமை படை சார்பில் கரூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சியில் பள்ளப்பட்டி அரசு பள்ளி மாணவன் முதலிடம் பெற்றார். கரூர் மாவட்டம் , அரவக்குறிச்சி அருகே உள்ள, பள்ளப்பட்டி அரசு பள்ளியில் 7ம் வகுப்பு பயின்று வரும் மாணவன் முஹம்மது ரூபியான். ‘இன்றைய சூழலில் அதிகமாக சேர்ந்து வரும் குப்பை கழிவுகளை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் முறையையும், தீப்பற்றினால் தானாகவே தண்ணீர் ஊற்றி அணைக்கும் கருவியையும், இரவு நேரங்களில் வாகனங்கள் உமிழும் ஒளியால் ஏற்படும் விபத்தை தடுக்க தானியங்கி கருவியையும், ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே வாகனம் நகரும் கருவியையும் கண்டுபிடித்து பள்ளப்பட்டியில் அனைவரின் முன்பும் மாணவர் முஹம்மது ரூபியான் செயல் விளக்கம் செய்து காட்டினார். இது தொடர்பாக மாணவனை பல்வேறு அமைப்புகள் பாராட்டி வந்த நிலையில், கரூரில் தேசிய பசுமை படை சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சியில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையை மாணவர் ரூபியான் செய்து காட்டினார்.மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் மாணவன் ரூபியான் முதலிடம் பிடித்தார். முதலிடம் பிடித்த மாணவனை பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.
The post மாவட்ட அளவில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சி அரசு பள்ளி மாணவன் முதலிடம் appeared first on Dinakaran.