×

தென் கொரிய விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

சியோல்: தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் இருந்து ஜெஜூ ஏர் நிறுவனத்தின் விமானம் கடந்த 29ம் தேதி தென்கொரியாவின் முவான் நகருக்கு சென்றது. இந்த விமானம் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையை விட்டு விலகி சறுக்கியபடி சென்று விமான நிலையத்தின் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் விமானத்தில் தீப்பற்றி வெடித்துச் சிதறியதால் வான் உயரத்திற்கு புகை கிளம்பியது. இந்த விபத்தில் 179 பேர் உயிரிழந்தனர்.லேண்டிங் கியர் கோளறால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அது மிகுந்த சேதமடைந்த நிலையில் உள்ளது. அதில் விபத்து நடப்பதற்கு முன் உள்ள தகவல்களை பெறுவதற்கு கருப்பு பெட்டி அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் என்று தென்கொரிய அரசு தெரிவித்துள்ளது.

The post தென் கொரிய விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு appeared first on Dinakaran.

Tags : Seoul ,Jeju Air ,Bangkok, Thailand ,Muan, South Korea ,Muan Airport ,
× RELATED பதவியில் இருந்து நீக்கப்பட்ட...