×

200 டிசைனர் பைகள், 75 கைக்கடிகாரங்கள் தாய்லாந்து பெண் பிரதமரின் சொத்து மதிப்பு ₹3500 கோடி

பாங்காக்: தாய்லாந்து நாட்டின் பெண் பிரதமர் ஷினவத்ராவின் சொத்து மதிப்பு ரூ.3500 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டின் பெண் பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா(38). கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் பதவியை ஏற்ற இவர் முன்னாள் பிரதமரும், மிகப்பெரிய தொழில் அதிபருமான தக்சின் ஷினவத்ராவின் இளைய மகள்.

இவர் நேற்று தனது சொத்து மதிப்பை அறிவித்து உள்ளார். அதன்படி பேடோங்டர்ன் ஷினவத்ராவின் சொத்து மதிப்பு ரூ.3500 கோடி ஆகும். இதில் ரூ.17 கோடி மதிப்பில் 200 டிசைனர் பைகளும், 42 கோடி மதிப்பில் உயர் கைக்கடிகாரங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த சொத்து பட்டியலை தேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்திடம் அவர் தெரிவித்துள்ளார்.

The post 200 டிசைனர் பைகள், 75 கைக்கடிகாரங்கள் தாய்லாந்து பெண் பிரதமரின் சொத்து மதிப்பு ₹3500 கோடி appeared first on Dinakaran.

Tags :
× RELATED சீனாவில் வேகமாக பரவி வருவதால்...