×

அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கார் தாக்குதல் தனிநபரால் நடத்தப்பட்டது: அதிபர் பைடன் அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கார் ஒன்று பொதுமக்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் 15 பேர் உயிரிழந்தனர். 35பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தீவிரவாத தாக்குதலாக கருதி எப்பிஐ விசாரணை நடத்தி வருகின்றது. இந்த சம்பவத்தின்போது ஹூஸ்டன் நகரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஜப்பார்(42) காரை ஓட்டி சென்றார். சம்பவத்தை தொடர்ந்து உள்ளூர் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர் பலியானார்.

இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் பைடன்,‘‘நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடந்த கார் தாக்குதல் தனிநபரால் நடத்தப்பட்டது. தாக்குதலை நடத்தியவர் பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இது ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கான அவரது வலுவான ஆதரவை குறிக்கின்றது. இந்த தாக்குதலில் வெளிநாடு அல்லது உள்நாட்டு தொடர்புகள் உள்ளதாக என்பது குறித்து புலனாய்வு அமைப்புக்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றன” என்று தெரிவித்தார்.

The post அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கார் தாக்குதல் தனிநபரால் நடத்தப்பட்டது: அதிபர் பைடன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : attack on New Year's Eve in the ,United States ,President Biden ,Washington ,New Year's Eve ,US ,New Orleans, Louisiana ,FBI ,on New Year's Eve in the ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் ராணுவத்துக்கு ரூ.75 லட்சம் கோடி: அதிபர் பைடன் ஒப்புதல்